ஜோதிடம்
ஓய்-பவித்ரா மணி
புத்தாண்டு
ராசி
பலன்
2026:
வலிகளைப்
போக்கு
புதுமைகளைத்
தரப்போகும்
2026
புத்தாண்டு
பிறக்க
இன்னும்
சில
நாட்களே
உள்ளன.
அந்த
வகையில்,
இந்தப்
புத்தாண்டு
மிதுன
ராசிக்காரர்களுக்கு
எப்படி
இருக்கும்,
என்னென்ன
ஆசை,
கனவுகள்
நிறைவேறும்,
கவனமாக
இருக்க
வேண்டிய
விஷயங்கள்
என்ன
என்பது
குறித்துப்
பார்க்கலாம்.
2025
ஆம்
ஆண்டு
நிறைவடைய
இன்னும்
சில
நாட்களே
உள்ளன.
2026
புத்தாண்டு
பிறக்கப்
போகிறது.
இந்த
ஆண்டிலாவாது
நல்லவை
நடக்குமா,
பிரச்சனை
தீரூமான,
கனவுகள்
நிறைவேறுமா
என்று
காத்துக்
கொண்டிருப்பீர்கள்.
நிச்சயமாக
எல்லோருக்கும்
இந்த
ஆண்டு
புதுமை
செய்யும்
ஆண்டாக
இருக்கும்.
சூரியனின்
ஆதிக்கத்தில்
இந்த
ஆண்டு
பிறக்கப்
போகிறது.
சூரியனின்
நட்சத்திரமாகிய
கார்த்திகை
நட்சத்திரத்தில்
புத்தாண்டு
பிறக்கப்
போகிறது.
பாரபட்சமில்லாமல்
ஒளியைத்
தரக்கூடியவர்
சூரிய
பகவான்
என்பதால்
எல்லாருக்குமே
நல்ல
ஆண்டாக
இருக்கும்.
கஷ்டங்கள்
தீரும்.
சொந்த
தொழில்
தொடங்குவோரின்
எண்ணிக்கை
அதிகரிக்கும்.
நாடெங்கும்
பாதுகாப்பு
உணர்வு
அதிகமாகிக்
கொண்டே
போகும்.
மக்கள்
ஆரோக்கியத்தில்
கவனம்
செலுத்துவது
நல்லது.
மருத்துவத்
துறை
அற்புதமாக
வளரும்.
2026
புத்தாண்டில்
நிலம்
மற்றும்
தங்கத்தில்
முதலீடு
செய்வது
மிகப்பெரிய
ஏற்றத்தைக்
கொடுக்கும்.
திருக்கணிதத்தின்படி
சனி
ஏற்கனவே
மீனம்
வீட்டில்
இருக்கிறார்.
இந்த
ஆண்டு
ஜூன்
2
ஆம்
தேதி
குருப்பெயர்ச்சி,
டிசம்பர்
5
ஆம்
தேதி
ராகு
கேது
பெயர்ச்சி
ஆகிய
2
பெயர்ச்சிகள்
நடைபெறவுள்ளன.
குரு
இந்த
வருடம்
உச்சமடைந்து
கடகத்துக்கு
வருகிறார்.
மீண்டும்
அதே
குரு
அக்டோபர்
31
ஆம்
தேதி
சிம்ம
ராசிக்கு
அதிசாரத்தில்
போகிறார்.
அந்த
வகையில்,
இந்தப்
புத்தாண்டு
மிதுன
ராசிக்காரர்களுக்கு
எப்படி
இருக்கும்,
என்னென்ன
ஆசை,
கனவுகள்
நிறைவேறும்,
கவனமாக
இருக்க
வேண்டிய
விஷயங்கள்
என்ன
என்பது
குறித்து
இந்த
ஜோதிட
கட்டுரையில்
விரிவாகப்
பார்க்கலாம்.
மிதுனம்
(Mithunam
new
year
rasi
palan):
மிதுன
ராசிக்காரர்களே
உங்கள்
ராசிக்கு
12
ஆம்
வீட்டில்
சந்திரன்
இருக்கும்போது
இந்தப்
புத்தாண்டு
பிறக்கிறது.
கொஞ்சம்
சிக்கனமாக
இருப்பது
நல்லது.
மே
மாதம்
வரை
கவனம்
தேவை.
ஆரோக்கியத்தில்
கவனமாக
இருக்க
வேண்டும்.
அலர்ஜி,
தொற்று
ஏற்படும்
வாய்ப்புள்ளது.
ஜென்மகுரு
இருப்பதால்
தண்ணீர்
அதிகமாக
குடிப்பது
நல்லது.
உணவுப்
பழக்கவழக்கங்களை
திடீரென
மாற்றிக்
கொள்ளாமல்
இருப்பது
நல்லது.
உங்கள்
வயிற்றுக்கு
ஒத்துரும்
உணவரை
சாப்பிடுவது
நல்லது.
புதிதாக
பழக்கத்தை
மாற்றுவதை
தவிர்ப்பது
நல்லது.
ஜூன்
மாதத்தில்
இருந்து
குரு
பகவான்
நல்ல
இடத்துக்கு
வருகிறது.
ஜூன்
முதல்
அக்டோபர்
14
ஆம்
தேதி
வரைக்கும்
குரு
உங்கள்
ராசிக்கு
2
ஆம்
இடமான
தன
ஸ்தானத்தில்
அமரப்
போகிறார்.
அந்த
காலகட்டம்
உங்களுக்கு
திடீர்
பண
வரவு,
வீடு,
மனை,
சொத்து
வாங்குவது,
வண்டி
வாகனம்
வாங்குவது,
சுபகாரியங்களைச்
செய்வது
என
யோகமான
காலகட்டமாக
இருக்கும்.
குடும்பத்தில்
ஒரே
குஷி
குடும்பத்தில்
அடுத்தடுத்து
சுப
நிகழ்ச்சிகள்
நடக்கும்.
அக்டோபர்
14
ஆம்
தேதி
முதல்
டிசம்பர்
வரைக்கும்
குரு
3
ஆம்
வீட்டிற்கு
குரு
பகவான்
போவதால்
சகோதர
வகையில்
நன்மைகள்
நடக்கும்.
2026
ஆம்
ஆண்டின்
ஆரம்பத்தில்
ஒருமாதிரி
இருந்தாலும்
போகப்போக
பணவரவு,
செல்வாக்கை
கொடுக்கும்.
ஜனவரி
16
முதல்
பிப்ரவரி
23
ஆம்
தேதி
வரை
ராசிக்கு
8
ஆம்
இடத்தில்
செவ்வாய்
அமர்ந்திருப்பதால்
வண்டி,
வாகனங்களில்
கவனம்
தேவை.
குடும்பத்தில்
சிறு
சிறு
சலசலப்புகள்,
மனக்
கசப்புகள்,
பிரிவுகள்
வருவதற்கான
வாய்ப்புள்ளது.
சகோதர
வகையில்
அந்த
காலகட்டத்தில்
கவனம்
தேவை.
சனி
பகவானின்
அருள்
இருப்பதால்
புதிய
தொழில்
தொடங்குவது,
புதிய
முதலீடுகளைச்
செய்யும்
யோகம்
உண்டாகும்.
பங்குதாரர்கள்,
வேலையாட்கள்
உங்களுக்கு
ஆதரவாக
இருப்பார்கள்.
இரட்டிப்பு
லாபம்
வியாபாரத்தில்
இந்த
ஆண்டு
உங்களுக்கு
இரட்டிப்பு
லாபம்
கிடைக்கும்.
பத்தாம்
இடத்தில்
சனி
பகவான்
இந்த
ஆண்டு
முழுவதும்
இருப்பதால்
உத்தியோகம்
நன்றாக
இருக்கும்.
வேலைச்சுமையால்
என்ன
வாழ்க்கை
என்ற
எண்ணம்
தோன்றும்.
இருப்பினும்
ஜூன்
மாதத்தில்
இருந்து
அற்புதமான
யோகம்
உண்டாகும்.
வீடு
கட்டுவதற்கான
வாய்ப்புள்ளது.
நண்பர்கள்
வட்டம்
பெருகும்.
உறவினர்கள்
தேடி
வந்து
பேசுவார்கள்.
செல்வாக்குகள்
கூடும்
காலகட்டமாக
இருக்கும்.
சிலர்
தேர்தலில்
நின்று
பெயர்,
புகழ்
பெறும்
யோகம்
உண்டாகும்.
ஸ்ரீமன்
நாராயணன்
வழிபாடு,
பெருமாள்
வழிபாடு
உங்களுக்கு
ஏற்றத்தை
தரும்.
பார்வையற்றவர்களுக்கு
உதவுவது,
பச்சரிசி
தானமாகக்
கொடுப்பது
ஏற்றத்தை
தரும்.
More Stories
இந்த பிறந்த தேதிகள் சக்திவாய்ந்த அன்பை ஈர்க்கின்றன
உங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கான பயணத்தை உயர்த்துங்கள்
இன்றைய ராசிபலன் – Today Rasi Palan